கார் விற்பனை தொழில் செய்யும் 46 வயது ஆடவர் ஒருவர் தனது வீட்டின் 15வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
அந்த ஆடவர் ஷா ஆலம் ஜாலான் புடிமானில் அமைந்துள்ள தனது அடுக்குமாடியின் 15 வது மாடியிலிருந்து குதித்து ஆறவது மாடியில் சிக்கி தரையில் விழுந்து கிடந்தார் என அந்தச் சம்பவத்தை கண்ட பெண்மணி ஒருவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நேற்று 6.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மீட்பு பணி குழுவினருக்குத் தகவல் கிடைத்ததுடன் சமபவம் நடந்த இடத்திற்கு விரைந்து ஆடவரின் உடலை மீட்கும் பொழுது அந்த 46 வயது ஆடவர் இறந்து விட்டதாக முதலுதவி அளித்த மருத்துவ உதவியாளார்கள் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு நடவடிக்கை குழுவின் துணை இயக்குனர் ஹஃபிஷாம் முகமட் நூர் தெரிவித்தார்.








