பத்து பேர் உயிரிழந்த எல்மினா இலகுரக விமான விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அந்த விமானத்தில் மீட்கப்பட்டுள்ள கடைசி உரையாடல் இடம் பெற்ற 30 நிமிட குரல் ஒலிப்பதிவு நாடா தொடர்பில் விபத்துக்கு விடை காணப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிற்பகல் 2.48 மணியளவில் சுபாங், சுல்தான் அப்துல் அஜீஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இன்னும் 3 நிமிடங்களே எஞ்சியுள்ள வேளையில் அந்த இலகு ரக விமானம், சுங்கை பூலோ, எல்மினா, கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.
பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் உட்பட பத்து பேர் கொல்லப்பட்ட இந்த விபத்து தொடர்பான பூர்வாங்க அறிக்கையை தயாரிப்பதில் விசாரணைக் குழு, முழு வீச்சில் ஈடுபட்டு வருவதையும் அமைச்சர் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.








