Oct 17, 2026
Thisaigal NewsYouTube

துன் டாயிமிற்கு எதிரான குற்றச்சாட்டு ஆராயப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துன் டாயிமிற்கு எதிரான குற்றச்சாட்டு ஆராயப்படும்

கோலாலம்பூர், நவ. 13-


முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுதீனின் மறைவைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று நாட்டின் புதிய சட்டத்துறை தலைவர் டத்தோ முகமட் டுசுக்கி மொக்தார் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. துன் டாயிமின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தப்பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான், பேரா மற்றும் கெடாவில் உள்ள தனது சொத்துகள் மற்றும் ஆடம்பரக்கார்களின் விவரங்களை துன் டாயிம் அறிவிக்கவில்லை என்று கூறி, அவருக்கு எதிராக எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →