Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சான்றிதழ் பதிப்புரிமை 30 நிமிடங்கள் மட்டுமே
தற்போதைய செய்திகள்

சான்றிதழ் பதிப்புரிமை 30 நிமிடங்கள் மட்டுமே

Share:

சான்றிதழ் பதிப்புரிமை பெருவதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் கால அவகாசம் எடுத்த வேளையில், தற்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 30 நிமிடங்களிலேயே பெற்று கொள்ளலாம்.

அறிவிப்பு செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட Copyright to You (CR2U) எனும் புதிய திட்டம் உரிமையாளர்களுக்கு சான்றிதழ் பதிப்புரிமையை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொடுக்கப்படுவதாக மலேசிய அறிவார்ந்த சொத்துடைமை கழகத்தின் தலைவர் Dr முஹமாட் சுஹான் முஹமாட் சாயின் தெரிவித்தார்.

இந்த புதியதொரு திட்டம் பதிவுகளில் குறிப்பிடத்தக்க எழுச்சிகளுக்கு வழிவகுப்பதோடு 2024 ஆம் ஆண்டிலிருந்து 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று நம்பப்படுவதாக முஹமாட் சுஹான்கூறினார்.

சான்றிதழ் பதிப்புரிமை தொடர்ப்பான விழிப்புணர்வு இவ்வாண்டு 6,000 மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், இவை குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் முஹமாட் சுஹான் விளக்கினார்.

Related News

சான்றிதழ் பதிப்புரிமை 30 நிமிடங்கள் மட்டுமே | Thisaigal News