Sep 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.25-

பினாங்கில் உள்ள சீனக் கல்லறை ஒன்றில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் நாளை ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

37 வயது பெண்ணும், 58 வயது ஆணும் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டம் 377D- பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.

பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ ஒழுங்கீனமாக நடந்து கொள்வதைக் குற்றமாகக் கருதும் இப்பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

சீனக் கல்லறை ஒன்றில் இந்த ஜோடி ஆபாச செயலில் ஈடுபடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பினாங்கில் ஓர் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதை வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, இவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதியை நீதிமன்றத்தில் பெற்றிருந்தனர்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்