May 22, 2026
Thisaigal NewsYouTube
கார் கண்ணாடிகளை உடைத்ததாக நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கார் கண்ணாடிகளை உடைத்ததாக நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Share:

முவார், ஏப்ரல் 30-

நான்கு கார்களின் கண்ணாடிகளை மண்வெட்டியை பயன்படுத்தி உடைத்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவருக்கு 56 மாத சிறைத்தண்டனை விதிக்க முவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

45 வயது பைசால் மொஹ்சின் என்கிற அந்த தொழிலாளி மாஜிஸ்திரேட்ஃபாதீன் டாலிலா காலித் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஜொகூர், ஃபெல்டா மாகில் -வில் Grand Livina, Proton Saga, Waja உட்பட Pesona ஆகிய காரின் கண்ணாடிகளை மண்வெட்டியை கொண்டு அடித்து உடைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News