இன்று பிற்பகல் ஒரு மணியவில் தொடங்கி மாலை 4 மணி நேரம் வரை கொட்டித்தீர்த்த அடை மழையில சிப்பாங்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுதுடன் வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான பாதையான கோத்தா வாரிசான் - லாபாங்கான் தெர்பாங் அந்தாரபங்சா கோலாலம்பூர், ஜாலான் ஜென்டேரான் - சலாக் திங்கி மற்றும் ஜாலான் சிங்கை மெராப் - பங்கி ஆகிய சாலைகளே கடுமையாக பாதிக்கப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் தெரிவித்தார்.
அருகில் உள்ள ஆறுகளில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு, வழிந்தோடியதால் சாலைகளில் நீரின் மட்டம் உயர்ந்து வாகனமோட்டிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.








