Mar 22, 2026
Thisaigal NewsYouTube
புகார் இருக்கமானால் விசாரணை செய்யலாம்
தற்போதைய செய்திகள்

புகார் இருக்கமானால் விசாரணை செய்யலாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 28-

அமைச்சர் ஒருவரின் கணவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அரசாங்க குத்தகை வழங்கப்பட்டது தொடர்பில் புகார் இருக்குமானால், அது குறித்து விசாரணை செய்யலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மற்ற வழக்குகளின் தன்மையைப் போல் இதுவும் இருக்குமானால் அது குறித்து விசாரணை செய்யலாம் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ-வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி தலைமை செயல்முறை அதிகாரியாக இருக்கும் Asia Mobiliti, Technologies Sdn. Bhd. நிறுவனத்திற்கு சிலாங்கூர் மாநில அரசின் இரண்டு குத்தகைகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக வெளியான சர்ச்சை தொடர்பில் கருத்து கேட்ட போது பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக நேற்று பேசிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கிஅஸாம் பாக்கி, அமைச்சராக இருக்கும் ஹன்னா இயோ சம்பந்தப்பட்ட இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் குத்தகையை அவரின் கணவர் இராமச்சந்திரன் முனியாண்டிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்குமானால் அது குறித்து விசாரணை செய்யலாம், ஆனால், இது சிலாங்கூர் மாநில அரசின் குத்தகை என்பதால் அதில் குற்றம் இருப்பதாக அறிய முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

அஸாம் பாக்கியின் இந்த பதிலில் அதிருப்தி அடைந்த பலர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருக்கும் ஹன்னா இயோவின் கணவருக்கு ஒரு மாநில அரசின் குத்தகையை எவ்வாறு வழங்க முடியும், அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று SPRM- மை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து