Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பத்துமலையில் தொழிற்சாலை தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

பத்துமலையில் தொழிற்சாலை தீப்பற்றிக் கொண்டது

Share:

கோம்பாக், பத்துகேவ்ஸ் தொழிற்பேட்டை பகுதியில் சாயம் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தீப்பற்றிக்கொண்டது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது.

செலாயாங், வங்சா மாஜு மற்றும் கோம்பாக் செத்தியா ஆகிய மூன்று நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் முழு பலத்துடன் தீயை அணைக்க முற்பட்டதில் அந்த தொழிற்சாலை முழுமையாக அழிவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

தொழிற்சாலை 60 விழுக்காடு அழிந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை என்று அப்பேச்சாளர் குறிப்பிட்டார்..

Related News