தமது பராமரிப்பில் விடப்பட்டுள்ள 2 வயது குழந்தையை சித்ரவதை செய்ததாக நம்பப்படும் 28 வயது மாதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூரில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான இரு காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டப் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ஜம் ஹலிம் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
தலையிலும் கைகளிலும் காயங்களுக்கு ஆளான அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட நிலை குறித்து அதன் தந்தை போலீசில் புகார் செய்திருப்பதாக ஜாம் ஹலிம் விளக்கினார்.








