Mar 17, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்

Share:

சாலையின் அவசரத் தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த வாகனத்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 415.1 வது
கிலோ மீட்டரில் லெம்பா பெரிங்ஙின்னுக்கும், புக்கிட் தாஹார்க்கும் இடையே
நிகழ்ந்தது.
நேற்று காலை 11.05 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 36 மற்றும் 38 வயதுடைய அத்தம்பதியர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்தக்
காயங்கள் காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஹ்மாட் ஃபைசால் தஹ்ரிம் கூறினார்.

அத்தம்பதியர் பேராக், கமுண்டிங்கில் உள்ள தங்களின் சொந்த
ஊரில் விடுமுறையைக் கழித்து விட்டு யமாஹா ரக
மோட்டார் சைக்கிளில் பத்து கேவ்ஸில் உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த அத்தம்பதியரின் உடல்கள் சவப்பரிசோதனைக்காகக் கோல குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அஹ்மாட் ஃபைசால் , இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Related News