Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

Share:

மலாக்கா மாநில சட்டமன்றம் உடனடியாக கலைக்கப்படும் வாய்ப்பு இல்லை என அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவூப் யுசோஹ் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்கள், தேர்தலை நோக்கி தயாராகி வரும் நிலையில், மலாக்கா தனது அரசியல் கால அட்டவணையின் படியே செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வதிலும் மாநில அரசு தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கு உதவுவதற்காக தங்களின் கட்சி இயந்திரத்தை அனுப்பவுள்ளதாகவும் அப் ரவூப் யுசோஹ் தெரிவித்துள்ளார்.

அந்தத் தேர்தல்கள் முடிந்த பிறகு, மலாக்கா மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரத்தை பரிசீலிக்கவுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை மஸ்ஜித் தானா, கம்பங் புலாவ்விலுள்ள தனது இல்லத்தில் அப் ரவூப் யுசோஹ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாந... | Thisaigal News