பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கான மொத்த பாட நேரத்தை நிர்ணயிக்கும் விவகாரத்தில், புதிய கொள்கையை ஏற்படுத்தி, கல்வி அமைச்சு தலையிடக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்களது விரிவுரையாளர்களின் பணி சுமைகளை நன்கு அறிந்துள்ள பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினரிடம், அவ்விவகாரம் விடப்பட வேண்டும்.
அவர்களுக்கு தேவையான சிறந்த அணுகுமுறைகளை, பல்கலைக்கழக நிர்வாகத்தினரே ஏற்படுத்தி தருவார்கள் என தேசிய பேராசிரியர் மன்றத்தின் தலைவர் எமரிட்டஸ் பேராசிரியர் டத்தோ டாக்டர் ராடுவான் சே ரோஸ் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் மொத்த பாட நேரத்தை சீர்படுத்துவதற்கான தேவை குறித்து ஆராயப்பட்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் கதிர் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்
நடப்பில், விரிவுரையாளர்களுக்கான மொத்த பாட நேரம், சராசரியாக வாரத்திற்கு 18 மணி நேரமாக உள்ளது. அத்தரப்பினருக்கு வேறு முக்கிய பொறுப்புகளும் உள்ளதால், அவர்களுக்கு அது பெருஞ்சுமையாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அதனை மேற்கோள்காட்டி அவ்வாறு கருத்துரைத்த ராடுவான் சே ரோஸ், ஒவ்வொரு பல்கலைக்கழங்களிலும் கற்றல் கற்பித்தல் முறை மாறுபடுவதால், அதில் அமைச்சு தலையிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.








