Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ரத்துச்செய்யக் கோரி வழக்கறிஞர்கள் அமைப்பு வழக்கு பதிவு
தற்போதைய செய்திகள்

நஜிப்பிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ரத்துச்செய்யக் கோரி வழக்கறிஞர்கள் அமைப்பு வழக்கு பதிவு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 30-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் குறைத்துள்ள கூட்டரசு பிரதேச பொதுமன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர்கள் அமைப்பு, சட்டநடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாரியத்தின் அம்முடிவை ரத்து செய்ய வலியுறுத்தி, அமீர் & ராஜ்பால் காய் வழக்கறிஞர் சேவை நிறுவனம் வாயிலாக, அவ்வமைப்பு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதித்துறை சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதற்கு முன்பு, 1MDB நிதி முறைகேடு தொடர்பில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நஜிப் ரசாக்க்கிற்கு, 12 ஆண்டுகள் சிறையும் 210 மில்லியன் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. அவர் அரச பொது மன்னிப்பை கோரிய பிறகு, அந்த தண்டனை 6 ஆண்டுகள் சிறையாகவும் 50 மில்லியன் வெள்ளியாகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், அம்முடிவுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், கோலாலம்பூர், லாபுவான், புத்ரா ஜெயா கூட்டரசு பிரதேச பொதுமன்னிப்பு வாரியம் முதல் பிரதிவாதியாகவும் நஜிப் ரசாக்கை இரண்டாவது பிரதிவாதியாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நஜிப் ரசாக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது சட்டத்தை மீறும் நடவடிக்கை என்றும் அரசியலைமைப்ப்ன் படி அது செல்லாது எனவும் அது கூறியுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்