May 4, 2026
Thisaigal NewsYouTube
அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Share:

மாமன்னர் பிறப்பிக்கும் அவசரநிலை பிரகடனங்களை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 150 ஆவது பிரிவின் எட்டாவது உட்பிரிவின் கீழ், நாட்டின் பாதுகாப்பு கருதி மாமன்னர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், அதில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் செகுவேரா தெரிவித்தார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய மாமன்னர் அவசரநிலையை அறிவிக்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் நீதித்துறை தனது அதிகாரத்தைச் செலுத்த முடியாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News