Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பெரியவரை பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து கொள்ளையிட்ட நபர்
தற்போதைய செய்திகள்

பெரியவரை பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து கொள்ளையிட்ட நபர்

Share:

மலாக்கா, ஏப்ரல் 25-

மலாக்கா, மெர்லிமாவ், கம்பொங் ஆயர் தவார்- ரில் உள்ள ஒரு வீட்டில் பெரியவர் ஒருவரை பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து அவரிடம் கொள்ளையிட்டு சென்ற ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று காலை 9:30 மணியளவில் 61 வயதுடைய அந்த பெரியவர் தனது வீட்டின் பின் கதவுக்கு அருகில் தனியாக படுத்திருந்ததாகவும், தலை கவசம் மற்றும் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் மிளகாய் சாந்தை ஊற்றி, நாற்காலியால் தாக்கியதுடன் வீட்டில் கொள்ளையிட்டு சென்றதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமில் ரட்ஸி தெரிவித்தார்.

சந்தேகிக்கும் 30 வயதுடைய அவ்வாடவர் தப்பிச் செல்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவரிடம் 400 வெள்ளி ரொக்கப்பணம், நான்கு ஏ.டி.எம் கார்டுகள் ஓட்டுநர் உரிமம் உட்பட அடையாள அட்டையையும் கொள்ளையிட்டு சென்றதாக ஜமில் ரட்ஸி கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 394 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட ஆடவரை பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக ஜமில் ரட்ஸி மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்