Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கனரக இயந்திரத்தில் அரைப்பட்டு லோரி ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

கனரக இயந்திரத்தில் அரைப்பட்டு லோரி ஓட்டுநர் பலி

Share:

ஜேராந்துட், மார்ச் 9 -

லோரியில் வெட்டுமரங்களை ஏற்றும் நடவடிக்கையின் போது கனரக இயந்திரத்தின் சக்கரத்தில் அரைப்பட்டு லோரி ஓட்டுநர் பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பகாங், ஜாலான் ஜெராந்துட் பாடாங் பியோல் சாலையின் 26 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

கோல லிப்பிஸை சேர்ந்த 41 வயதுசைபுல்னிசாம் சாக்காரியா என்ற லோரி ஓட்டுநரே இச்சம்பவத்தில் மாண்டதாக ஜேராந்துட் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.

கனரக இயந்திரம் வெட்டுமரங்களை லோரியில் ஏற்றியப்பின்னர் அந்த வெட்டு மரங்களை சங்கிலியால் பிணைக்கும் பணியில் லோரி ஓட்டுநர் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

வெட்டுமரங்களை சங்கிலியால் பிணைக்கும் நடவடிக்கை முடிந்து விட்டது என்று கருதிய கனரக இயந்திர ஓட்டுநர், வெட்டுமரங்ங்கள் மீதான இயந்திரத்தின் பிடியை தளர்த்தி, இயந்திரத்தை பின்நோக்கி நகர்த்திய போது கீழே விழுந்து கிடந்த லோரி ஓட்டுநர் மீது சக்கரம் ஏற்றியதாக அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்