Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவரின் பண்பியல் ஒழுக்கத்தைப் பேண ஏ.பி.சி கூறுகள்
தற்போதைய செய்திகள்

மாணவரின் பண்பியல் ஒழுக்கத்தைப் பேண ஏ.பி.சி கூறுகள்

Share:

ஏ.பி.சி என்று சுருங்க அழைக்கப்படும் காகாசான் அனாக் யாங் பயேக் லாகி செர்டிக் திட்டமானது மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம், மரியாதை, பணிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்பியல் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு கொண்டுள்ள கடப்பாடாகும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

"நல்ல பிள்ளையாகவும் அறிவார்ந்த பிள்ளையாகவும்" என்ற இந்த திட்டமானது, மாணவர்கள் மத்தியில் உருவெடுத்துள்ள கட்டொழுங்கு மற்றும் சமூகவியல் பிரச்னைகளை தீர்க்க வல்லதாகும் என்பது கல்வி அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.

மாணவர்களின் ஆளுமையை மேலும் சிறக்க வைக்க இந்த ஏ.பி.சி திட்டம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்று கல்வி அமைச்சு நம்புவதாக ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

Related News