Jul 28, 2026
Thisaigal NewsYouTube
DLP இரட்டை மொழி பாடத் திட்டத்திற்கு தகுதியுடைய மாணவர்களை பள்ளி நிர்வாகமே ​தீர்மானிக்கும்
தற்போதைய செய்திகள்

DLP இரட்டை மொழி பாடத் திட்டத்திற்கு தகுதியுடைய மாணவர்களை பள்ளி நிர்வாகமே ​தீர்மானிக்கும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 04-

DLP எனப்படும் இரட்டை மொழி பாடத் திட்டத்தில் பங்கேற்பதற்கு எந்தெந்த மாணவர்கள் தகுதியுடையவர்கள் என்பதைத் ​தீர்மானிக்கும் சிறப்பு உரிமை, தற்போது பள்ளி நிர்வாகத்திற்கே கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

அதேவேளையில் இந்த DLP இரட்டை மொழி பாடத் திட்டத்​திற்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கு ஒரு வழிகாட்டலாக மதிப்பீட்டு சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்தவொரு விதிமுறையோ அல்லது நிபந்தனையோ விதிக்கப்படவில்லை என்பதையும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும் DLP வகுப்புகளுக்கு எந்தெந்த மாணவர்கள் தகுதியானவர்கள் என்பதை ​தீர்மானிப்பதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு பிரத்தியேக உரிமை உள்ளது என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் மொழித்திறனை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகளின் மூலம் அவர்களின் திறனாற்றல் கண்டறியப்படும்.

DLP வகுப்பில் சேர்வதற்கு அனைத்து மாணவர்களும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றாலும் இதில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் மட்டுமே அந்த இருமொழிப்பாடத் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதில் மலாய்மொழியில் அவர்களின் திறமையும் முக்கிய கூறாக கருத்தில் கொள்ளப்படும்.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் திறனாற்றலை அடிப்படையாக கொண்டு அவர்களை ​தீர்மானிக்கும் உரிமை பள்ளி ​நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

தங்கள் பிள்ளைகள் DLP வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்று தாங்கள் விருப்பப்பட்டாலும் அந்த வகுப்பில் தங்கள் பிள்ளைகள் சேர்க்கப்படுவதற்கு அனும​தி மறுக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் சிலர் எழுப்பியுள்ள அச்சம் தொடர்பில் கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்