Mar 17, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் எம்.பி. க்கு 100 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

முன்னாள் எம்.பி. க்கு 100 வெள்ளி அபராதம்

Share:

கடந்த ஜனவரி மாதம் அவமரியாதையான சொல்லை பயன்படுத்திய குற்றத்திற்காக காப்பார் முன்னாள் பிகேஆர் எம்.பி. எஸ். மாணிக்கவாசகத்திற்கு ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 100 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மூன்று நாள் சிறைத் ண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் சாஷா டியானா சப்துதமது தீர்ப்பில் தெரிவித்தார்.

59 வயதான மாணிக்கவாசகம் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டார். கோலசிலாங்கூர் PKR தொகுதியின் முன்னாள் தலைவரான மாணிக்கவாசகம் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் தனிநபர் ஒருவருக்கு ஆத்திரத்தை தூண்டும் வகையில் அவமரியாதையான சொல்லை குறுந்தகவலில் அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் பார்வையை இழந்த நிலையில் மாற்றுத் திறனாளிக்கான OKU அட்டையை வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்த மாணிக்கவாசகம், தனக்கு எதிரான அபராதத்தை செலுத்துவதாக நீதிமன்றத்தில் உறுதி கூறினார்.

Related News