May 22, 2026
Thisaigal NewsYouTube
ஃபிலிட் கார்டுக்கு விண்ணப்பபிக்கும்படி அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

ஃபிலிட் கார்டுக்கு விண்ணப்பபிக்கும்படி அறிவுறுத்து

Share:

கிள்ளான், மே 28-

டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித்தொகை திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியதும். டீசலுக்கான உதவித் தொகையை பெறுவதற்கு டீசல் எண்ணெய்யை பயன்படுத்தும் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் ஃபிலிட் கார்டுக்கு விண்ணப்பிக்குமாறு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின துணை அமைச்சர் ஃபுஜியா சல்லேஹ் கேட்டுக்கொண்டுள்ளாார்.

இதற்காக சுமார் 90 ஆயிரம் Fleet கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 23 வகையான சரக்கு வாகனங்கள் டீசலுக்கான இலக்குரிய உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளன என்று துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டீசலை பயன்படுத்தும் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் இந்த சிறப்பு அட்டையை வைத்திருந்தால் மட்டுமே எண்ணெய் நிலையங்களில் டீசலுக்கான உதவித் தொகையை பெற முடியும் என்று ஃபுஜியா சல்லேஹ் குறிப்பிட்டார்.

Related News