Mar 16, 2026
Thisaigal NewsYouTube
இரு மாணவர்கள் மானபங்கம், ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு மாணவர்கள் மானபங்கம், ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரு மாணவர்களை மானபங்கம் செய்ததாக ஆடவர் ஒருவர், மலாக்கா, ஆயேர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

43 வயது முஹமாட் சுல்கர்நாயின் அத்தான் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அந்த நபர், இக்குற்றத்தை கடந்த ஜனவரி 15 ஆம் தேதி நள்ளிரவு ஆயர் குரோ, தாமான் தாசிக் உத்தாமா, Jalan TU ( தி.யூ.) என்ற இடத்தில் புரிந்ததாக நீதிமன்றதில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இரு ஆண் மாணவர்கள் கொடுத்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News