மலேசியாவில் மிக முதிய யானை என்று போற்றப்பட்டு வந்த 86 வயதுடைய லோக்மாலா என்ற யானை, முதுமை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இறந்தது. இந்த யானை கடந்த 1974 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்திற்கும், பூட்டானுக்கும் இடையில் உள்ள அஸாம் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும்.
பகாங், லஞ்சாங்கில் உள்ள யானை சரணாலயத்தில் இந்த லோக்மாலா யானை பாதுகாக்கப்பட்டு வந்தது. சரணாலயத்திற்கு கொண்டு வரப்படும் காட்டு யானைகளை பழக்கப்படுத்துவதற்கு கும்கி யானையாக லோக்மாலா பயன்படுத்தப்பட்டு வந்ததாக அந்த சரணாலயத்தின் தலைவர் சே கு முகமட் சம்சூரி தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


