முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
லஞ்ச ஊழல் குற்றத்திற்காக 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 70 வயதான நஜீப், பொது மன்னிப்பு கோரி, செய்து கொண்ட விண்ணப்பத்தை மன்னிப்பு வாரியம் நேற்று அங்கீரித்துள்ளதாக Utusan Malaysia நாளிதழை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடு செய்து வெளியிட்டுள்ளது.
நஜீப்பின் விண்ணப்பம் தொடர்பில் பொது மன்னிப்பு வாரியம் தனது முடிவை ஓர் அறிக்கையின் வாயிலாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.
எனினும் நஜீப்பிற்கு பொது மன்னிப்பு கிடைத்து இருப்பதாக கூறப்படும் தகவல் தொடர்பில் மன்னிப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வமான அறிக்கைக்காக ஊடகங்கள் தற்போது காத்திருக்கின்றன.
1MDB துணை நிறுவனமான SRC Internasional லஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜீப், தனக்கு எதிரான சிறைத் தண்டனையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் காஜாங் சிறையில் அனுபவித்து வருகிறார்.








