அலோர் ஸ்டார்,பிப்.1
குவாலா நெராங், ஜாலான் ஃபெல்டா லுபுக் மெர்பாவ்வில் உள்ள ஒரு வீட்டில் துணி துவைக்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட நான்கு வயது சிறுமியை தீயணைப்பு படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 3:53 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக குவாலா நெராங் தீயணைப்பு, மீட்பு படையின் தலைவர் முஹமாட் அமினுடின் மாட் கொசாலி தெரிவித்தார்.
பிபிபி குவாலா நெராங் நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் அவ்வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக ஓர் அறிக்கையில் முஹமாட் அமினுடின் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகாரணங்களை பயன்படுத்தி அச்சிறுமியை பாதுகாப்பாக மீட்டெடுத்து அக்குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் விவரித்தார்.








