Nov 20, 2025
Thisaigal NewsYouTube
போலி அடையாள கார்டு: 84  அந்நிய நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலி அடையாள கார்டு: 84 அந்நிய நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கூலாய்,

மற்றவர்களுக்குச் சொந்தமான போலி அடையாள கார்டை வைத்திருந்ததாக 84 அந்நிய நாட்டவர்கள் ஜோகூர், கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் R. ஷாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 84 பேரில் 83 பேர் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து தலா 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டனர்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், 7 மாத சிறைத் தண்டனை விதிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது. மேலும் ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜைக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிடிபட்ட 84 பேரில் 66 பேர் பெண்கள் ஆவார். எஞ்சிய 18 பேர் ஆண்கள் ஆவர்.

Related News

போலி அடையாள கார்டு: 84 அந்நிய நாட்டவர்கள் மீது குற்றச்ச... | Thisaigal News