May 22, 2026
Thisaigal NewsYouTube
கோலா லங்காட்டில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கோலா லங்காட்டில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

Share:

சிலாங்கூர், மே 24-

சிலாங்கூர், லபோஹன் டகாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார துண்டிப்பு காரணமாக கோலா லங்காட் -டில் 41 பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் சப் ஸ்டேசன் உத்தாமா ஒலக் லெம்பிட் -டில் மின்சார உபகரணங்களில் அவசர பழுதுபார்ப்பு வேலையின் காரணமாக நீர் விநியோக தடை ஏற்பட்டிருப்பதாக ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள், டயாலிசிஸ் மையங்கள் உட்பட இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளக்கூடிய முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை வழங்கி நீர் டேங்கர்கள் மூலம் ஒரு மாற்று உதவியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடையும் என்று அது கூறியுள்ளது.

மின்சார உபகரணங்களை பழுதுபார்க்கும் பணி முடிவடைந்த பிறகு நீர் விநியோகம் மீண்டும் வழக்கத்திற்கு திரும்பும் என்று ஆயர் சிலாங்கூர் தகவல் வெளியிட்டிருந்தது.

Related News