May 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மாணவர்கள் மானபங்கம், உஸ்தாஸ் கைது
தற்போதைய செய்திகள்

மூன்று மாணவர்கள் மானபங்கம், உஸ்தாஸ் கைது

Share:

கிளாந்தான், ஏப்ரல் 26-

கிளந்தானில் உள்ள ஒரு தாஹ்பிஸ் மையத்தில் மூன்று மாணவர்களை மானபங்கம் செய்ததாக உஸ்தாஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி குறிப்பிடப்பட்ட இடத்தில் 12 க்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுடைய அம்மூன்று மாணவர்களையும் மானபங்கம் செய்ய முயற்சித்ததாக புகார் கிடைக்க பெற்றதாக மச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ஷாபிகி ஹுசின் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேகிக்கும் 39 வயதுடைய அந்த உஸ்தாஸ் கைது செய்யப்பட்டதுடன் குற்றவியல் சட்டம் 377C பிரிவின் கீழ் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஹ்மத் ஷாபிகி கூறினார்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட அந்த உஸ்தாஸ் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த வேளை, மேலும் ஏப்ரல் 23 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 29 ஆம் தேதி வரையில் அவரின் தடுப்பு காவல் நீடிக்கப்பட்டிருப்பதாக அஹ்மத் ஷாபிகி ஓர் ஊடக அறிக்கையில் இன்று அறிவித்தார்.

Related News