Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வாங்கிய கடனை திரும்ப கொடுக்காததால் பெண் ஒருவர் தாக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வாங்கிய கடனை திரும்ப கொடுக்காததால் பெண் ஒருவர் தாக்கப்பட்டார்

Share:

பத்து பஹாட், மே 08-

வாங்கிய கடனை திரும்ப செலுத்த தவறியதால் பெண் ஒருவரை அரைந்து, முடியை இழுத்து வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக ஸ்னூக்கர் மையத்தின் உதவியாளர் ஒருவர் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

20 வயது நூர் அரினா அகிலா கெலானா என்கிற அந்த ஸ்னூக்கர் மையத்தின் உதவியாளர் மாஜிஸ்திரேட் சுஹைலா ஷாபியுதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறை அல்லது கூடிய பட்சம் 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 4 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் பத்து பஹாட் - டில் உள்ள ஒரு ஸ்னூக்கர் மையத்தில் தம்மிடம் வாங்கிய 300 வெள்ளி கடன் தொகையை திரும்ப செலுத்த தவறியதால் 22 வயது பெண் ஒருவரை அரைந்து, முடியை இழுத்து வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்