அண்மையில், நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற தொழில்முனைவோர், தொழில் கண்காட்சி, மற்றும் STEM & PBL நிகழ்ச்சியை ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நெகிரி செம்பிலானிலேயே முதல் ஒரு பள்ளியாக இத்திட்டத்தை மாணவர்களிடையே கொண்டு வந்ததற்கும் அவர்களுக்கு சிறு சிறு வளாகங்களை ஏற்பாடு செய்து வணிகம் செய்ய வாய்ப்பு கொடுத்த சம்பந்தப்பட்ட பள்ளியின் முயற்சியையும் வீரப்பன் வெகுவாக பாராட்டினார்.

அதுமட்டுமின்றி, நெகிரி செம்பிலானில் உள்ள தொழில்முனைவோருக்கு எந்தவொரு வட்டியுமின்றி கடனுதவி வழங்கியிருக்கும் நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் முன்முயற்சியையும் வீரப்பன் மேற்கோள் காட்டி தமது தொடக்க உறையில் குறிப்பிட்டார்.
TVET பயிற்சி உள்ளிட்ட கல்வித்துறைக்கு மட்டுமின்றி, ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோரை உருவாக்கக்கூடிய வணிகத் துறையிலும் மாணவர்கள் அதீத ஈடுபாடு காட்டிட வேண்டும் என்று வீரப்பன் வலியுறுத்தினார்.

நெகிரி செம்பிலானில் உள்ள இதர பள்ளிகளும் இதுப்போன்ற தொழில்முனைவோர் திட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் இலாபத்தை அடைவதில் பள்ளி கூட்டுறவு சங்கங்கள் தீவிரமாக போட்டியிட்டு செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.








