Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மகன் செய்த கொடூரக் கொலை: பெற்றோர் தலை துண்டிப்பு! சுங்கை பட்டாணியை உலுக்கிய சோகம்
தற்போதைய செய்திகள்

மகன் செய்த கொடூரக் கொலை: பெற்றோர் தலை துண்டிப்பு! சுங்கை பட்டாணியை உலுக்கிய சோகம்

Share:

கெடா, சுங்கை பட்டாணி, மெர்போக், கம்பங் பெலாவ் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் முதிய தம்பதியினர் மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவர் உடலில் கடுமையான வெட்டுக்காங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

65 வயது முதியவர் மற்றும் அவரது 53 வயது மனைவி ஆகியோரின் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் வீட்டின் சமையலறை பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகக் போலீஸ் துறையினர் தெரிவித்தனர்.

அந்த வீட்டின் மேல் தளத்தில் உள்ள ஒரு படுக்கையறையில், சந்தேக நபர் என்று நம்பப்படும் அவர்களின் 29 வயது மகனின் சடலமும் காயங்களுடன் மீட்கப்பட்டது. உயிரிழந்த மகனுக்கு முன்னதாக, மனநலப் பாதிப்புகள் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைக் காணவில்லை என்றும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் துறையினர் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன ஹன்யான் ரம்லான் என்று குறிப்பிட்டார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்