Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளிக்கிழமை வரை தொடர் மழை அபாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளிக்கிழமை வரை தொடர் மழை அபாயம்

நவ. 27-

இன்று கிலாந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் முழுவதும் மட்டும் இன்றி, பகாங் மாநிலத்தின் குவாந்தான், JERANTUT மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை கடுமையான தொடர்மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பெர்லிஸ், கெடாவின் Kubang Pasu, Kota Setar, Pokok Sena, Padang Terap, Pendang, Sik, Baling ஆகிய பகுதிகளிலும் பேரா மாநிலத்தின் Hulu Perak மாவட்டத்திலும்,
Pahangஇன் Cameron Highlands, Lipis, Maran, Pekan, Rompin ஆகிய பகுதிகளிலும் மிகவும் கடுமையான தொடர்மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங் மாநிலத்தின் Raub, Bentong, Temerloh, Bera பினாங்கு, கெடாவின் Langkawi, Yan, Kuala Muda, Kulim, Bandar Baharu பேராவின் Kerian, Larut, Matang dan Selama, Kuala Kangsar, Kinta Kampar
ஜோகூரின் Segamat, Mersing, Kota Tingg ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்யும் என்றும் இப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டு எனவும் MetMalaysiaஅறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →