Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஆறரை லட்சம் வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஆறரை லட்சம் வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

Share:

மலாக்கா,ஜன.30
மலாக்கா, தாமான் சாகாவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், 6 லட்சத்து 50 ஆயிரத்து 369 வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள் போலீசால் பறிமுதல் செய்யப்பட்டன என மலாக்கா மாநில போலீஸ் துணைத் தலைவர் முஹமாட் நஸ்ரி நவாவி தெரிவித்தார்.

ஓர் உள்ளூர்வாசியும், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரும் இந்தச் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கடந்த 4 மாதங்களாக மிகத் தீவிரமாகப் போதைப் பொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்கு உதவ, எதிர்வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.

Related News