இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரையில் எஸ்.பி.எம் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சர்ஃபட்லினா சிடெக் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி நிலையை அடைய தாம் பிராத்தனை செய்து கொள்வதாக ஃபட்லினா சிடெக் முகநூல் அகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் துறை அமைச்சரான டாக்டர் சலிஹா முஸ்தஃபா வும் 2023 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முகநூல் வாயிலாக தமது வாழ்த்துக்களை கூறினார்.
மாணவர்கள் மேன்மையையும் வெற்றியையும் அடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.








