Oct 7, 2026
Thisaigal NewsYouTube

பலாப்ஸ் பயிற்சியாளர் ஷம்சுல் மரண விவகார விசாரணையை புக்கிட் அமான் ஏற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பலாப்ஸ் பயிற்சியாளர் ஷம்சுல் மரண விவகார விசாரணையை புக்கிட் அமான் ஏற்றது

கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடி மரண விவகாரம் தொடர்பான புலன் விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நேரடியாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

22 வயது மதிக்கத்தக்க அந்த பயிற்சி மாணவனின் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்துவதற்கு ஏதுவாக அவரின் உடலைத் தோண்டி எடுப்பதற்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருப்பதைத் தொடர்ந்து அந்த மாணவன் மரணம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் ஏற்றுள்ளது என்று குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரச மலேசிய போலீஸ் படை முழுமையாக உறுதிப் பூண்டுள்ளது. நடவடிக்கைகளை மேலும் ஒருங்கிணைக்கும் நோக்கத்திற்காக, வழக்கின் விசாரணையை இன்று முதல் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவான டி Five ஃபினால் (D5) முழுமையாகக் கையகப்படுத்தப்படும் என்று டத்தோ குமார் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு