Sep 28, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் 4 மாவட்டங்களில் முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் ஜாக்கிரதை
தற்போதைய செய்திகள்

பேராவில் 4 மாவட்டங்களில் முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் ஜாக்கிரதை

Share:

பேராக் மாநிலத்தில் கிந்தா, கோலாகங்சார், செலாமா மற்றும் உலு பேராக் ஆகிய நான்கு மாவட்டங்களில் 'முதற்கட்ட வெப்பம்' பதிவாகியுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா விடுத்துள்ள இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஏ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் அதிக வெப்பத்தால் ஏற்படக்கூடிய வெப்பத்தாக்கு அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெப்பம் அதிகமாக இருக்கும் வேளையில் போதிய அளவு நீர் அருந்துமாறும், உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவஅவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்