Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து இனத்தவர்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்
தற்போதைய செய்திகள்

அனைத்து இனத்தவர்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அத்தொகுதியில் செயல்படக்கூடிய தனது மக்கள் சேவை மையத்தில் அனைத்து இனத்தவர்களின் பிரதிநிதிகளும் பணிக்கு அமர்த்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று டிஏபி- யை சேர்ந்த பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் பாங் சோக் தவ் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இதற்கு முன்பு, தேர்தல் கொள்கை அறிக்கையில் தாம் அறிவித்து இருப்பதைப் போன்று அனைத்து இனத்தவர்கள் சார்பாகவும் ஒவ்வொருவரும் தனது சேவை மையத்தில் அமர்த்தப்பட்டு, மக்கள் பிரச்னைகள் கண்டறியப்படும், குறிப்பாக, மலாய்க்காரர், இந்தியர், சீனர் மற்றும் ஓராங் அஸ்லி சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சேவை மையத்தில் இருப்பர் என்று பாங் சோக் தவ் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனும், அவர்களின் நல்வாழ்வுமே தமக்கு முக்கியம் என்று குறிப்பிட்ட பாங் சோக் தவ், தேர்தல் கொள்கை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்பதில் ஐயமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலா குபு பாரு, கம்போங் அசாம் கும்பாங்கில் உள்ள டேவான் செர்பகுனா மண்டபத்தில் நடைபெற்ற வளைப்பந்துப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

கோலகுபு பாரு தொகுதியில் உள்ள ஒவ்வாரு சமூகத்தினரும் நன்மைப்பெற வேண்டும். அவர்களின் தொடர்பு வசதிக்காக அந்தந்த மொழிப்பேசக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் தனது சேவை மையத்தில் மக்களுக்கான உரிய சேவையையும், உதவிகளையும் வழங்கி வருவர் என்று பாங் சோக் தவ் உறுதி அளித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்