Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பணி ஓய்வு பெற்றவர் வெ.460,000 இழப்பு
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வு பெற்றவர் வெ.460,000 இழப்பு

Share:

சிரம்பான்.பிப்.2
சிரம்பானில் பணி ஓய்வு பெற்ற 57 வயதுடைய பெண் ஒருவர் நிலம் வாங்கும் விவகாரத்தில் கடந்த ஆண்டு 460,000 வெள்ளியை இழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு மாதங்களுக்குள் நிலம் குறித்து அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட வேளையில் இரண்டு மாதங்கள் கழித்து அந்நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ஆன்லைன் வங்கியின் மூலமாக அப்பணத்தை அறிமுகமாகாத அந்நபரிடம் செலுத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் ஹட்டா செ டின் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முஹமாட் ஹட்டா கூறினார்.

Related News