வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Maybank மற்றும் CIMB ஆகிய வங்கிகள் 6 மாத காலத்திற்கு மொ ரோட்டோரியம் ( morotorium ) சலுகையை வழங்கியுள்ளன.
சம்பந்தப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தாங்கள் வாங்கி கடனுக்கான மாதாந்திர தவணைப் பணத்தை திருப்பி செலுத்துவதை 6 மாத காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு அந்த வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் மிகுந்த நெருக்கடியில் உள்ள மக்களின் துயரத்தை உணர்ந்து இதர வங்கிகளும் இத்தகைய மொ ரோட்டோரியம் சலுகையை வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.








