May 21, 2026
Thisaigal NewsYouTube
டீசல் கடத்தல் கும்பலை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

டீசல் கடத்தல் கும்பலை போலீசார் கைது

Share:

ஜொகூர் பாரு,ஜன.31
மாசாய், ப்லெந்தோங் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் நான்கு நபர்களை போலீசார் கைது செய்யப்பட்டதுடன் 81,400 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் நடந்த இச்சோதனையில் 32 முதல் 43 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் IBC தொட்டியிலிருந்து டீசலை லாரிக்கு கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அவ்விடத்தில் மேற்கொண்ட சோதனையில் 81,400 லிட்டர் எரிபொருளை கொண்ட நான்கு ஸ்கிட் தொட்டில்கள், மூன்று IBC தொட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஜோகூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம்.குமார் கூறினார்.

இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குமார் தெரிவித்தார்.

Related News