Jul 6, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சத்தை வேரறுப்பது மடானி அரசாங்கத்தின் முழு கவனம்
தற்போதைய செய்திகள்

லஞ்சத்தை வேரறுப்பது மடானி அரசாங்கத்தின் முழு கவனம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.10-

நாட்டைச் செல்லரிக்கக்கூடிய லஞ்ச ஊழலை வேரறுப்பது, அதிகார துஷ்பிரயோகத்தைத் துடைத்தொழிப்பது ஆகியவற்றில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளது. ஆனால், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான சீர்திருத்தங்கள், ஆக்ககரமான பலனைத் தருவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

இந்த போராட்டத்தில் இருந்து மடானி அரசாங்கம் பின்வாங்காது என்று குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு வருடமும் இப்பிரச்னையைத் தீர்ப்பதில் சில முன்னேற்றங்கள் இருக்கின்றன என்று அன்வார் தெரிவித்தார்.

Related News