May 21, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி

Share:

கோத்தா மார்டு, ஜாலான் மாராக் பாராக்கில் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் Fibre-optic cable - ளை மாற்றி பொருத்தும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

உள்நாட்டை சேர்ந்த 20 வயதுடைய Abi'rafhdi Affendy மற்றும் 32 வயதுடைய Khomeni Maulana ஆகியோர் மின்சார தாக்கத்தினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியப்படுகிறது.

நேற்று காலை 7:30 மணியளவில் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து மேலும் 8 ஒப்பந்த தொழிலாளர்கள் அந்நிறுவனத்தில் Fibre-optic cable - ளை அமைப்பதற்கு மின்கம்பம் பொருத்தும் வேலையில் இருந்தபோது இச்சம்பவம் நடந்திருப்பதாக Kota Mardu மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zairolnizal Ishak தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் இருந்த வேளையில் அருகில் மின்சார கேபிள் ஒன்று அறுந்து கிடந்ததை கண்டதாக விசாரணையில் தெரியவந்ததாக Zairolnizal Ishak கூறினார்.

Related News