Jul 28, 2026
Thisaigal NewsYouTube
உள்துறை அமைச்சு தலையிடாது
தற்போதைய செய்திகள்

உள்துறை அமைச்சு தலையிடாது

Share:

நிபோங் தெபால், ஜூன் 04-

கடந்த மே 28 ஆம் தேதி கே.எல், செண்டரில் மாற்றுத் திறனாளி ஒருவரை அரச பிரமுகர் ஒருவரின் மெய்க்காவலர் தாக்கியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் உள்துறை அமைச்சு தலையிடாது என்ற அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன்-னிடமே உள்துறை விட்டு விட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தமது தலையீடு இல்லை என்பதையும் சைபுடின் விளக்கினார்.

Related News