Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூவர் உயிரிழந்தது தற்கொலையாகும்
தற்போதைய செய்திகள்

மூவர் உயிரிழந்தது தற்கொலையாகும்

Share:

அம்பாங், கம்போங் பாருவில் வாடகை வீடு ஒன்றில் மாதுவும், அவரின் இரு பிள்ளைகளும் இறந்து கிடந்தது தற்கொலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகை அலங்கரிப்பு பொருட்கள் விற்பனை பணிப்பெண்ணான 42 வயதுடைய மாதுவும் 14 வயது மகனும், 15 வயது மகளும் வீட்டின் அறையில் இறந்து கிடந்தது நேற்று காலை 7.30 மணி அளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தனர்.

வீட்டில் எரிவாயு கலனில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை அவர்கள் நுகர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டின் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஒட்டு
வில்லை டேப் கொண்டு இறுக்கமாக மூடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தவிர, அந்த மூவரும் இறந்து கிடந்த அறையின் சோபாவின் அடியில் தீ பற்றவைக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் , உயில் மற்றும் பணம் அடங்கிய உறை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்த மூவரும் இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இம்மரணத்திற்கான காரணம் மற்றும் இச்சம்பவத்தில் குற்றத் தன்மை உள்ளதா?
என்பதைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டத்தோ உசேன் உமர் கூறினார்.

Related News