Jan 19, 2026
Thisaigal NewsYouTube
6 ஆடவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

6 ஆடவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்

Share:

நீதிமன்ற அலுவல் நேரத்திற்கு முன்னதகாவே ஜாமீன் முகப்பிடம் மூடப்பட்டதால், ஜாமீன் பணத்தைச் செலுத்த இயலாமல், வார இறுதி நாட்களைப் போலீஸ் தடுப்பு காவலில் கழிக்க வேண்டிய துரதிர்ஷ்டத்திற்கு ஆளான 6 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று பொது விடுமுறை என்ற போதிலும், அந்த அறுவரும் இன்று காலை 10 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் டூத்தா நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ஜாமீன் முகப்பிடம் திறக்கப்பட்டு அந்த அறுவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சைட் தலையிட்டத்தைத் தொடர்ந்து, அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை, மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், அந்த அறுவரையும் ஜாமினில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்த போதிலும், ஜாமீன் பணத்தைச் செலுத்துவதற்குச் சென்ற போது, முகப்பிடம் முன்கூட்டியே மூடப்பட்டிருந்ததால் ஜாமீன் பணத்தைச் செலுத்த முடியாமல் அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதற்கு அமைச்சர் அஸாலினா கண்டனம் தெரிவித்தார்.

Related News