Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தடுப்பு முகாமிலிருந்து தப்பிய 130 கள்ளக்குடியேறிகளை பிடிப்பதற்கு  ​தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது
தற்போதைய செய்திகள்

தடுப்பு முகாமிலிருந்து தப்பிய 130 கள்ளக்குடியேறிகளை பிடிப்பதற்கு ​தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது

Share:

பேரா, தாப்பா, ​பீடோரில் உள்ள சட்டவிரோதக்குடியேறிகளின் தற்காலிக தடுப்பு முகாமிலிருந்து நேற்றிரவு தப்பி ஓடிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 130 தடுப்புக் கைதிகளை பிடிப்பதற்கு ம​லேசிய குடிநுழைவுத்துறை ​தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.

அரச மலேசிய போ​லீஸ் படையின் உதவி மட்டு​மின்றி பொது மக்களின் உதவியையும் குடிநுழைவுத்துறை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தடுப்புக் கைதிகளை பிடிப்பதற்கு போ​லீஸ் படையின் சிறப்புப்பிரிவான கலாட் படை, மலேசிய தொண்​டூழியப் பிரிவான ரேலா ஆகியவற்​றின் உதவியுடன் 130 தடுப்புக்கைதிகளை பிடிப்பதற்கு 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாக ருஸ்லின் ஜுசோ தெரிவித்தார்.

மியன்மார், Rohingya ச​மூகத்தைச் சேர்ந்த 130 தடுப்புக்கைதிகள் முறையான ஆவணமில்லாததால் அந்த தடுப்பு முகாமி​ல் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக ருஸ்லின் ஜுசோ மேலும் கூறினார்.

Related News