May 22, 2026
Thisaigal NewsYouTube
உலகில் மிகச் சிறந்த உணவு மையாக கோலாலம்பூர் 7 ஆவது இடத்திற்கு தேர்வு
தற்போதைய செய்திகள்

உலகில் மிகச் சிறந்த உணவு மையாக கோலாலம்பூர் 7 ஆவது இடத்திற்கு தேர்வு

Share:

உலகில் மிகச்சிறந்த உணவு மைய நகராக கோலாலம்பூர் மாநகர், 7 ஆவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாசி லெமாக் உணவு, அதனைத் தொடர்ந்து தொம்யாம் சூப் மற்றும் ரோட்டி ஜானாய் ஆகியவற்றுக்கு கோலாலம்பூர் மாநகர் சிறந்து விளங்குகிறது என்று லண்டனை தளமாக கொண்ட மக்களின் வாழ்க்கைப் பாணியை சித்தரிக்கும் சஞ்சிகை, கோலாலம்பூர் மாநகரை உலகில் 7 நகராக தேர்வு செய்துள்ளது.

பல ஆண்டு காலமாக மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் பலதரப்பட்ட உணவு வகைகளுக்கு பிரசித்திப்பெற்ற இடமாக கோலாலம்பூர் விளங்குகிறது என்று எழுத்தாளர் Ng Su Ann வர்ணித்துள்ளார்.

ஒரு நகரின் அமைவிடம், கலாச்சாரம், வாழ்வியல் முறையின் அடிப்படையில் அந்நகரின் உணவு பழக்க வழக்கங்கள் போன்ற கூறுகளை கருத்தில் கொண்டு, ஒரு நகருக்கு அந்த சஞ்சிகை புள்ளிகைள வழங்கி வருகிறது.

Related News