Mar 16, 2026
Thisaigal NewsYouTube
குடியிருப்புப் பகுதிகளை வெளிநாட்டுத் தொழிலாளர் தங்குமிடங்களாக மாற்ற தடை
தற்போதைய செய்திகள்

குடியிருப்புப் பகுதிகளை வெளிநாட்டுத் தொழிலாளர் தங்குமிடங்களாக மாற்ற தடை

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை இனி வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கும் விடுதிகளாகப் பயன்படுத்த முடியாது என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது என நெகிரி செம்பிலான் மாநில ஊராட்சி மன்றம், வீடமைப்பு, போக்குவரத்துக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ.அருல் குமார் கூறினார்.

மாநிலத்தில் உள்ள முதலாளிகள் தங்கள் அனைத்து தொழிலாளர்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மாற்றுவதற்கு இந்த ஆண்டு இறுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது எனவும் J அருல் குமார் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கெனத் தனியாகக் கட்டப்படும் தங்கும் விடுதிகள் வேலிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக இருக்க வேண்டும் என அருள் தெரிவித்தார்.

இவ்வாறு தனியே வெளிநாட்டுத் தொழிலாளர் தங்குமிடம் அமைக்கப்படுமானால், பல தொந்தரவுகளும் சுகாதாரப் பிரச்சனைகளும் குறைக்கப்படும் என்றார் அவர்.

Related News