May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் தடுப்புக்காவலில் விசாரணைக்கைதி மரணம்
தற்போதைய செய்திகள்

போலீஸ் தடுப்புக்காவலில் விசாரணைக்கைதி மரணம்

Share:

பினாங்கு, Seberang Perai Utara மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் தடுப்புக் காவல் அறையில் 46 வயது விசாரணைக் கைதி ஒருவர் இன்று மரணம் அடைந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், போதைப்பொருள் தொடர்பில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக பினாங்க மாநில போலீஸ் துணைத் தலைவர் Datuk Mohamed Usuf Jan Mohamad தெரிவித்துள்ளார்.

அந்த நபருடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்று இருந்தனர்.

அந்நபர், கடந்த திங்கட்கிழமை முதல் வயிறு வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது என்று Datuk Mohamed Usuf மேலும் கூறினார்.

Related News