2023 - 2024 கல்வியாண்டில் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்தற்கு இடம் கேட்டு மனு செய்த மாணவர்களின் விண்ணப்ப முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.எஸ்டிபிஎம் அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதியை கொண்டுள்ள மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த முடிவுகள், வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








